Sunday, 25 January 2009

அன்ன தாதா சுகி பவா

திருச்சி மலைக்கோட்டைக்கு அருகில் ஆண்டர்வீதி என்றொரு தெரு.உள்ளே நுழைந்து இரண்டாவது கட்டிடம் மதுராகபே.காலை 9.00 மணியிலிருந்து மாலை 4.00 மணி வரையில் சாப்பாடு கிடைக்கும்.கலியாண பந்தியைப்போல எட்டு வரிசைக்கு மேல் டேபிள் சேர் போடப்பட்டிருக்கும்.நான் இந்த ஹோட்டலின் உணவுக்கு பரம ரசிகன்.சாதாரண வீட்டுச் சாப்பாடு போல் தான் இருக்கும்.சாம்பார்,ரசம், மோர்குழம்பு அல்லது வற்றல் குழம்பு,ஒரு கறி ஒரு கூட்டு மோர் வேண்டுமானால் தயிர்.ஒரு முறை இங்கு சாப்பிட்டால் ருசி நாக்கை விட்டு போகாது.விரத நாட்களில் வெங்காயம், பூண்டு இல்லாத சமயல் தான்.அரைத்துவிட்ட சாம்பாரும், பெருங்காயம் மனக்கும் ரசமும் நினைவில் இருந்து கொண்டிருக்கும்.சாப்பிட்டு முடித்ததும் ஸ்ரமத்தோடு " அன்ன தாதா சுகி பவா"" என மனசு தானாக சொல்லும்.

Thursday, 8 January 2009

வெளியில் தெரியாத ரசிகர் மன்றங்கள்.

திருச்சியில் வெளியில் தெரியாத பல ரசிகர்மன்றங்கள் உண்டு.இப்போது சாரதாஸ் ஜவுளிக்கடைக்கு என்று பிரத்யேகமான ரசிகர் கூட்டங்கள் உண்டு. என்ன தான் மழை பொழிந்தாலும், வெயில் அடித்தாலும் அந்தக்கடையில் தான் துணிமணிகள் எடுக்கவேண்டும் என பிடிவாதமாக இருக்கும் மனிதர்கள் உண்டு.பக்கத்து கிராமங்களில் இருந்து சாப்பாடு கட்டிக் கொண்டு வந்து துணிமணிகளை எடுத்துவிட்டு அந்த ஹாலிலேயே ஒரு ஓரமாக கொன்டுவந்த உணவை உண்ணும் குடும்பத்தினரை பார்த்திருக்கிறேன்.இது சென்டிமென்ட் காரணமாக கூட இருக்கலாம்.சிறு வயதில் தீபாவளிக்கு அப்பாவுடன் சாரதாஸ் வந்து துணிகள் எடுத்த மகன் அதே நினவலைகளுடன் இன்று தன் குடும்பத்துடன் இங்கு வ்ந்து விடுகிறார்போலும்.இவர்களுக்கு சாரதாஸ் மஞ்சள் பை வந்தால் தான் தீபாவளி வந்த மாதிரி இது மதம் தாண்டி இஸ்லாமிய மக்கள் ரம்ஜான் காலத்திலும், கிருத்துவர்கள் கிருஸ்துமஸ் காலத்திலும் இங்கு குழுமுவது வாடிக்கை.( ஆனால் நான் சாரதாஸில் துணி எடுப்பதில்லை என்பது வேறு விஷயம் கூட்டமே எனக்கு அலர்ஜி)இதே போல திருச்சி யில் பிர்மானந்தா சர்பத்,மார்கெட் ஜிகிர்தண்டா,கிருஷ்னா ஆயில் மில்,இப்படி அறிவிக்கப்படாத ரசிகர் மன்ற்ங்கள் ஏராளம். இது ஏன் இங்கே என்கிறீர்களா? நானும் ஒரு ரசிகர் மன்றத்துக்காரன் தான். அடுத்தப் பதிவில் அதை பற்றி எழுதுகிறேன்.

bullet

Sunday, 4 January 2009

திருவரங்கத்து சிறப்பு தோசை



திருவரங்கத்தில் மார்கழிமாதத்தில் பல விசேஷங்கள் உண்டு.பகல்பத்து,இராப்பத்து, அரயர்சேவை,முத்தங்கி சேவை, என சிறப்புகள் நீண்டு கொண்டே போகும்.அதை பற்றியெல்லாம் இங்கு நான் எழுதப்போவதில்லை.இந்த நாட்களில்மட்டுமே பிரசாதமாகக் கிடைக்கும் சம்பாரதோசை பற்றிய பதிவு இது.தோசை என்றால் எந்த அளவு இருக்கும், எவ்வளவு மொத்தம் இருக்கும், என்று உங்களுக்குள் ஒரு கற்பணை இருக்கும். அதையெல்லாம் தவிடு பொடி யாக்கிவிடும் நேரில் பார்த்தால். நெய் தோய்ந்து இருக்கும்.வாயில் போட்டால் அவ்வளவு சுவை.தொட்டுக்கொள்ள வேறு ஒன்றும் தேவை யில்லை.(கேட்டால் நம்மை ஒரு மாதிரியாகப் பார்ப்பார்கள்.)ஒரு தாம்பாளம் சைசில் இருக்கும். அதனை பாதியாக்கி அதயும் பாதியக்கி அதயும் பதியாக்கி ஒருவர் சாப்பிட்டால் வயிறு நிரம்பிவிடும். இன்றய விலை ரூ.100/ எட்டு பேர் சாப்பிடலாம்.ஒருமுறை இந்த 20 நாட்களில் வந்து இதனை சுவைத்துப் பாருங்கள் அப்புறம் வருடா வருடம் வந்துவிடுவீர்