Monday, 9 February 2009

கோபுரத்தின் மீதேறிக் கீழே குதித்துத் தற்கொலை


இது வெள்ளை கோபுரம்.இக் கொபுரத்தின் உள்புறம் சுவற்றில் செதுக்கியுள்ள சிற்பங்கள் மற்றும் கல்வெட்டு தொடர்பான திரு.ஆ. சிவசுப்பிரமணியன் அவ‌ர்க‌ளின் க‌ட்டுரையிலிருந்து ஒரு ப‌குதி.இது கால‌ச்சுவ‌டு இத‌ழில் திரு.சுஜாதா அவ‌ர்க‌ளுக்கு ப‌தில‌ளிக்கும் வித‌மாக‌ க‌ட்டுரை ஆசிரிய‌ர் எழுதிய‌து.அப் பெரும் க‌ட்டுரையிலிருந்து ந‌ம‌க்கு வேண்டிய‌ ப‌குதி ம‌ட்டும் இங்கே.
கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வைத்தியநாத காýங்கராயன் என்ற கோனேரி ராயன் வட தமிழகத்தின் மன்னனாக ஆட்சி புரிந்துவந்தான். சைவனான இவனால் திரு அரங்கநாதர் கோவிலுக்கு ஏற்பட்ட இடையூறுகளைக் கோயிலொழுகு விரிவாகக் குறிப்பிடுகிறது (மேலது: 586-587). அதைத் தற்கால நடையில் வைஷ்ணவ ஸ்ரீ கூறுவது வருமாறு:

கோனேரி ராஜா திருவானைக்காவýல் உள்ள சிலருடன் நட்புக் கொண்டு அவர்களைத் தங்களுடைய விருப்பப்படி வரி வசூýத்துக்கொள்ளவும், திருவானைக்காவினுடைய எல்லையாகத் திருமதில்கள் கட்டிக்கொள்ளவும் உதவிசெய்தார்.

ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களைக் கோனேரி ராஜா தனக்கு வேண்டியவர்களான கோட்டை சாமந்தனார் மற்றும் சென்றப்ப நாயக்கர் ஆகியோருக்குக் குத்தகைக்குவிட்டார். ‘புர வரி’ ‘காணிக்கை வரி’ ‘பட்டு வரி’ ‘பரிவட்ட வரி’ போன்ற வரிகளை விதித்து ஸ்ரீரங்கம் கோயில் ஸ்ரீபண்டாரத்தில் சேர்த்து வைக்கப்பட்டிருந்த உயர்ந்த திருவாபரணங்களையும் பொற்காசுகளையும் கவர்ந்து சென்றான்.

இதை எதிர்க்கும் வகையில் அழகிய மணவாளதாசர் என்ற பெரியாழ்வாரும் இரண்டு ஜீயர்களும் திருவரங்கத்தின் வெள்ளைக் கோபுரத்தின் மீதேறிக் கீழே குதித்துத் தற்கொலை செய்துகொண்டனர். அப்பாவு அய்யங்கார் என்பவரும் தெற்கு இராஜகோபுரத்தின் மீதேறிக் கீழே குதித்துத் தற்கொலை செய்துகொண்டார். இவர்களுள் முதல் மூவருடைய உருவச் சிலைகளை வெள்ளைக் கோபுரத்தின் நடைபாதையிலும் தெற்கு கோபுர வாயிýன் கீழ்ப்புற நிலையில் அப்பாவு அய்யங்காரின் உருவச் சிலையையும், கந்தாடை இராமானுச முனிவர் என்பவர் செதுக்கிவைத்தார். இந் நிகழ்வு குறித்து இரு கல்வெட்டுகளும் உள்ளன
கோனேரி ராயன் செயலை எதிர்த்துக் கோபுரத்திýருந்து குதித்து உயிர் துறந்த அப்பாவு அய்யங்காரின் சிலைக்குச் சில மரியாதைகளையும் நைவேத்தியங்களையும் கந்தாடை இராமானுச முனிவர் ஏற்படுத்தினார். இதை அப்பாவு அய்யங்காரின் சிலைக்குமேல் உள்ள கல்வெட்டு குறிப்பிடுகிறது.

கூரநாராயண ஜீயர் என்பவர் வைணவ விரோதிகளான திருவானைக்கா சைவர்களை ஒழித்தது குறித்துக் ‘கோயிலொழுகு’ (பக்: 433-434) குறிப்பிடும் செய்தி வருமாறு:

‘அந்த ஜீயரும் சைவர்களோடு கூடியிருந்து அவர்களுக்கு நன்மை பண்ணுகிறோம் என்று சொல்ý ஒரு மஹேஸ்வர பூஜைக்கு ஏற்பாடு செய்தார். கிழக்கே காட்டழகிய சிங்கர் கோயிலுக்கு பின்வழியில் பெரிதாகக் கொட்டகை அமைத்து அதிலே ஒரு பாகசாலையை (சமையல் செய்யுமிடம்) நிர்மாணித்தார். அந்த இடத்தில் ஒரு பெரிய கொப்பரையில் (விளிம்பு கொண்ட அகலமான வாயை உடைய ஒரு பாத்திரம்) நன்றாக நெய்யைக் காய்ச்சி வைத்தார். சைவர்கள் அனைவரையும் சாப்பிட அழைத்து அவர்கள் பந்தியிலே உட்கார்ந் திருக்கும்போது தம்முடைய மார்பிலே நரஸிம்ஹ யந்திரத்தை கட்டிக்கொண்டு காய்கிற நெய்க் கொப்பரையிலே அவர் குதிக்க அந்தக் கொட்டகையில் இருந்த சைவர்கள் அனைவரும் தீய்ந்து சாம்பலாகிப்போனார்கள்.

No comments:

Post a Comment

உங்கள் எதிவினையை இங்கு பதியலாமே