இன்று நவராத்திரி துவக்கம்.புரட்டாசி சனிக்கிழமை.வடக்கு வாசல் வழியாக தாயார் சன்னதி வந்தடைந்தோம் நானும் நண்பர் மோஹனும்.மணி4.30.தாயார் சன்னதி நடை திறக்கவில்லை.6.00 மணிக்கு புறப்படு.பின்னர் புதிதாக பொன் வேயப்பட்டிருக்கும் கொலுமண்டபத்தில் தாயார் சேவை என தெரிந்து கொண்டோம்.பிரதக்க்ஷணம் வந்தோம்.பிரகாரம் முழுதும் மாயிழைக்கோலம் காவி பார்டரில் அவ்வளவு அழகு.பல மாமிகள் கோல வேலைப்படுகளில் ஈடுபட்டிருந்தனர்.ஒரு பெண் போலீஸ் கூட யூனிபார்முடன் அதில் ஒருவராக இருந்தது ஆச்சரியம்.பெரியபெருமாளை பார்த்துவிடலாம் எனும் பிரயத்தனத்தில் நக்ந்தோம். எவ்வளவு ஆசை?.புரட்டாசி முதல் சனிக்கிழமை கூட்டம் நிரம்பி வழியும் நம் ஆசைக்கு அளவில்லை என நினைத்துக்கொண்டேன்.ஆனால் 50.00 ரூ கியூ வில் டிக்கட் வங்கி நாழிகேட்டான் வாசல் தாண்டி உள்ளே போனதும் கியூ வில் எங்கும் நிற்காமல் நேராக காயத்ரி மண்டபத்தில் உள்ள உண்டியலுக்கு அருகில் போய்தான் நின்றோம்.கனவா? நினைவா?.6.00 மணீக்கு நடை சாத்தப்படும் எனச் சொல்லி
வேகவேகமாக பக்தர்கள் சேவை முடிந்து அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தனர்.கர்ப்பக்கிரஹம்.ஆஹா என்ன அழகு.பெரிய பெருமாளுக்கு தைலக்காப்பு.ஆகையால் பாத சேவை இல்லை.ஆபரணங்களும் இல்லை.முன்னால் நம்பெருமாள்.ஜொலிப்பு.மற்ற எல்லா இடங்களையும் விட பெரிய பெருமாளுக்கு முன் இருக்கும் போது நம்பெருமாளின் அழகு கூடுகிறதாகத் தோன்றுகிறது.கிடைத்த சிறு நாழிகையில் எதை பார்ப்ப்து எனத்தெரியாமல் எதையும் முழுமையாக உள்வாங்க முடியவில்லை.எல்லாம் பேரழகு.பிரம்மாண்டம்.நாம் என்ன ஆண்டாளா?
பின்னர் சக்கரத்தாழ்வார் சன்னதி வந்தோம்.இங்கு நேர் எதிர்.கூட்டம் அதிகம்.5.00 ரூ கியூவே நீண்டிருந்தது.அர்ச்சனை சீட்டு வாங்கி கியூவில் நின்று சேவித்தோம்.
மீண்டும் தாயார் சன்னதி வந்தடைந்தோம்.தாயார் புறப்பாட்டினை எதிர்நோக்கி பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.தாயார் சரியாக 6.30 மணிக்கு புறப்பாடு.கோடியில் நிற்பவர்களுக்கும் காட்சிதரும் தாய்.எனக்கும் காட்சி தந்தாள்.கண்கொள்ளாகாட்சி.கண்ணாடிக்கு அருகே நிறிருந்தோம். தாயார் வடக்கே நேரே கண்ணாடி அருகே வந்து சற்று நேரம் நின்று மீண்டும் மேற்கு நோக்கி திரும்பினார்.அந்த ஒருகணம் எனக்காகவே காட்சி அளித்ததாக உணர்ந்தேன்.நான் இளம் வயதில் லேட்டாக வீட்டிற்கு வந்தாலும் எனக்கான ஒரு பங்கு பலகாரத்தை பத்திரமாக ஒரு கிண்ணத்தில் மூடி வத்திருந்ததை எடுத்துத்தரும் அம்மா மாதிரி.தாயார் எனக்கான சேவை சாதித்தருளினார்.அம்மா...அம்மா.. என வாய்விட்டு கூப்பிட்டேன் .நான் கூப்பிடும் தூரத்தில் தாயார்.என்னை போலவே எல்லோருருக்கும் தாயார் பிரத்யேகமாக காட்சி தந்துள்ளார் என்பது அவர்களின் முகத்திலேயே தெரிந்தது.வேளுகுடி கிருஷ்ணன் துணைவி மற்றும் மகனுடன் வந்திருந்ததப் பார்த்தேன்.ஒரு வயதான மாமி தாயார் முகத்தைபார்த்ததும் மகிழ்ச்சி வெள்ளத்தில் கைகூப்பி புன்னகைத்ததை மோஹன் காட்டினார்.தாயாருடனேயே பிரகாரம் சுற்றி வந்தோம்.இன்றய பொழுது ந்ல்ல பொழுது.நினைத்துக் கூட பார்க்கவில்லை .தாயார் ,பெரியபெருமாள்,நம்பெருமாள்,சக்கரத்தாழ்வார்,நால்வர் சேவையும் இவ்வளவு சுலபத்தில் கிடைக்குமென்று.
குறிப்பு: பெரிய பெருமாள் மூலவர் ரெங்கநாதர்.
நம்பெருமாள் உற்சவர்.தாயார் சன்னதிவிட்டு வெளிவந்தபோது தேசிகர் சன்னதி தின்ணையில் சர்க்கரை பொங்கல் சுட சுட .தாயார் வெறும் கையுடன் என்ணை அனுப்புவதேயில்லை.தேசிகர் சன்னதி முன் உள்ள தின்ணையும், உடையவர் சன்னதி முன்னுள்ள தின்ணையும், எனக்கு மிகவுக் பிடித்தவை.உட்கார்ந்து பார்த்தால் தான் அதன் சுகம் தெரியும்.
Sunday, 20 September 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
உங்கள் எதிவினையை இங்கு பதியலாமே