சனிக்கிழமை ஸ்ரீரங்கத்தில் 228.03.2009 இன்று காலை வேறு முக்கியமான அலுவல் இருந்ததால் ஸ்ரீரங்கம் செல்வதை மாலை தள்ளி வைத்தேன்.7.45 க்கு கோவிலுக்குள் சென்றேன்.சக்கரத்தாழ்வார், பெரிய பெருமாள்,தாயார், சேவை முடிய 9.15 ஆகிவிட்டது.நம்பெருமாள் உபய நாச்சியாருடன் மூலஸ்தானத்தில் எழுந்தருளியிருந்தார்.காலை நேரத்திதைவிட மாலையில் சக்கரத்தாழ்வார் சன்னதியில் ஜன நெருக்கடி அதிகம்.காலைவீசி நடக்க முடியாது.சரியாக 9.00 மணிக்கு ஆரியபடாள் வாசல் உள் அனுமதிக்கப்படுவதில்லை.விவரம் தெரிந்தவர்கள் சரியாக எங்கு சுற்றினாலும் 8.30 க்கு ஆரியபடாள் வாசலுக்குள் சென்று விடுகிறார்கள்.8.50 க்குள் பெருமாள் சேவை முடித்து ஓட்டமாக தாயார் சன்னதி ஒடி தாயார் சேவையையும் முடித்து விடுகிறார்கள்.9.00 மணிக்கு தாயார் சன்னதி நடை சாத்தப்படும்.அடியேனும் இந்தமுறை அவ்வாறே செய்தேன்.அரவணை என்பது ஒரு பிரசாதம்.இரவு தாயார் சன்னதியிலிருந்து 9.30 மணிக்கும் , பெருமாள் சன்னதியிலிருந்து 10.00 மணிக்கும் நைவேத்யம் முடிந்து வரும்.பிரசாத ஸ்டாலுக்கு பின் உள்ள வாயில் உள்ளே சென்றால்(ஸ்ரீ பண்டாரம் என்று பெயராம் http://mykitchenpitch.wordpress.com/2007/06/28/aravanai/>ஜெயஸ்ரீ பதிவிலிருந்து) இந்த நேரத்திற்கென்றே ஒரு கூட்டம் கிரில் கதவுகளுக்கு பின் ரெடியாக நின்று கொண்டிருப்பர்.சூடான அரவணை ( சர்க்கரைப் பொங்கல் போல இருக்கும்.இனிப்பு அளவாக இருக்கும்,நெய் ஊறிக்கொண்டிருக்கும்)தாயார் சன்னதியிலிருந்து வந்தவுடன் உருண்டை கணக்கில் இலையில் வைத்து தருகிறார்கள்.ஒரு உருண்டை 5.00 ரூ.பிரசாதமாக சாப்பிடலாம்.நிறைய சாப்பிட முடியாது.நெய் அதிகம் என்பதால் திகட்டும்.(சிறிது உவர்ப்பு சுவையுடன் இருக்கும் என்பது கூடுதல் தகவல்).
தகவல்: இரவு 9.30 க்கு தயார் சன்னதியிலிருந்தும்,10.00 மணிக்கு பெருமாள் சன்னதியிலிருந்தும் வரும் அரவணை பிரசாதம் பிரசாத ஸ்டாலில் கிடைக்கும்.
கொசுறு:பாலக்கரை பிர்மானந்தா சர்பத் 5.00 ரூ விலிருந்து 6.00ரூ ஆகிவிட்டது
இன்று சாப்பிட்ட பிரசாதம்: தயிர்சாதம் எலுமிச்சை ஊறுகாய்
அரவணை பற்றிய ஜெயஸ்ரீ யின் சமமையல் குறிப்புக்கு இங்கே http://mykitchenpitch.wordpress.com/2007/06/28/aravanai/
Sunday, 29 March 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
உங்கள் எதிவினையை இங்கு பதியலாமே