Friday, 10 April 2009

ஸ்ரீரங்கத்தில் சேர்த்தி



08.04.2009 இன்று பங்குனி உத்தரம்.ஸ்ரீரங்கத்தில் சேர்த்தி.மாலை 3.00 மணிக்கே கியூ வில் நின்று விட்டோம்.3.30 க்கு ரூ.150/ க்கான கியூ வை திறந்து விட்டார்கள்.ஒரே தள்ளு முள்ளு தான்.தாயாரையும் பெருமாளையும் ஒரு சேர பார்க்கும் போது ஆஹா...என்ன ஒரு பாக்கியம்.தாயார் சன்னதியில் நுழைந்து வில்வமரம் வழியாக சேர்த்தி மண்டபம் ஏறி சேவித்து விட்டு கீழிரங்கி வசந்த மண்டபத்துள் நுழைந்து பக்கவாட்டு கதவு வழியாக நந்தவனம் வந்து சக்கரத்தாழ்வார் சன்னதி அடைகிறது கியூ.சக்கரத்தாழ்வார் சன்னதியில் மைசூர்பா,ஜாங்கிரி என ஒரே ஸ்வீட் கூடைகள்.வயதான மாமிகள் பாவம் ரொம்ப சிரமம்.150 ரூ கியூ வில் ஒரு பாட்டி இன்னொரு பாட்டியிடம் சொன்னது" போன வருஷம் 50 ரூ இந்த வருஷம் 150 ரூ இன்னியிலேந்து ஒரு நாளுக்கு ஒரு ரூபா போட்டுண்டு வந்தா கூட அடுத்த வருஷத்துக்கு சேர்த்தி சேவைக்கு ஆகிவிடும்" என்ன ஒரு கணக்கு? கோயிலொழுகு 5 ம் பாக‌ம் இன்று ஸ்ரீரங்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.500 ரூ.இந்த இரண்டு நாட்களில் மட்டும் வாங்குபவர்களுக்கு 400 ரூ.இதைப்பற்றி தனி பதிவு எழுதவேண்டும்.

இன்றய பிரசாதம்: புளியோதரை வடை

தகவல்: தாயார் முகத்தில் என்றைக்கும் விட இன்று ஒரு பூரிப்பு என்னால் உணர முடிந்தது.பிரமையோ என்று தோன்றியது. ஜயந்தியும் அதையே சொன்னாள்.

எச்சரிக்கை: பெருமாள் அருகில் சேவிக்கும் போது பூணல் போட்ட தடிமனான கருப்பு அய்யங்காரை சேவார்த்திகளை பிடித்து தள்ளுவதற்காகவே நிறுத்தியிருக்கிறார்கள்.ஆண் பெண் சிறியவர் பெரியவர் வித்தியாசமில்லாமல் மனுஷன் பிடித்து தள்ளுகிறார் .
படம் இன்று எடுக்கப்பட்டதல்ல.

5 comments:

  1. Hi

    I want to be a follower of this blog. Please add the "Followers" gadget.

    With regards

    Maximum India

    ReplyDelete
  2. ஸ்ரீ ரங்கத்துடன் ஒரு தொடர்பு ஏற்படுத்தி கொடுப்பதற்கு நன்றி

    ReplyDelete
  3. ஓம் நமோ நாராயணா!.தாயாரையும் பெருமாளையும்
    தரிசிக்க வைத்ததற்க்கு.காண கண் கோடி வேண்டும்.

    ReplyDelete
  4. ஸ்ரீரங்கம் கோவில் வருமானம் ரொம்ப கம்மிங்க. அதுனால தான் ஏத்திக்கிட்டே போறாங்க. பல புறப்பாடுகள், முறைகள். இது எல்லாத்துக்கும் செலவு அதிகம். அதான்.

    ReplyDelete
  5. கடைசியா கமெண்ட் வேலை செய்யற மாதிரி மாத்திட்டீங்களா ?

    ReplyDelete

உங்கள் எதிவினையை இங்கு பதியலாமே