Friday, 8 May 2009

ஸ்ரீமுஷ்ணம் 2

திருச்சியிலிருந்து காலை 6.30 க்கு பல்லவன் எக்ஸ்பிரஸில் விருத்தாசத்திற்கு காலை 8.30 க்கு வந்து சேர்ந்தோம் நானும் ஜயந்தியும்.அங்கிருந்து ஆட்டோவில் பஸ்நிலையம்.காலை 9.15 க்கு காட்டுமன்னார்குடி போகும் பஸ்ஸில் ஏறி 45 நிமிடத்தில் ஸ்ரீமுஷ்ணம் வந்தடடைந்தோம்.தேர் புறப்பாடு ஆகி வடக்கு வீதியில் இருந்தது.கோயில் நடை சார்த்தியிருந்தது.இருந்தாலும் மூலவரை கிரில் கேட்டிற்கு வெளியில் இருந்து தரிசிக்க முடிந்தது.பிரபலமான புஷ்கரணி, அரசமரம்,சப்த கன்னிகக், தாயார் சன்னதி அனத்தையும் பார்த்துவிட்டு தேரோடும் வீதியை அடந்தோம். ஊர் அழகாக உள்ளது.எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம்.பச்சைகுத்துதல், ரப்பர் பந்து வியாபாரம்,பலூன்,அல்வா,மருத்துவக்குழு கொட்டகை,ஐஸ் வியாபாரம்,இலவச நீர்மோர், பானகம்,அலம்பிவிடப்பட்ட தார்ச்சாலை,எல்லாமே அந்த மண்ணின் மணத்தோடு.கோவில் மேற்கு பாத்து இருக்கிறது.வடக்கு வீதி திருப்பத்தில் தேர் இருந்தது.தேர் நகரும் போது ஆஹா...என்ன அழகு.தேரில் மாங்காய், தேங்காய், ஈச்சங்காய் என குலை குலையாய், தோரணங்கள்.குழந்தைகளை தேரில் ஏற்றி பெருமாளிடம் காட்டி இறக்கி விடும் வழக்கம் உள்ளது.நிறைய பெற்றோர்கள் சிறு குழந்தைகளை அவ்வாறு தேரில் ஏற்றி இறக்கியவாறு இருந்தனர்.தெரில் பெருமாள் தரிசனம் செய்துவிட்டு,தம்பி ஹரியுடன் எனது அத்தை பையன் சிவாண்ணா அகத்திற்கு சென்று அருமையான மதிய உணவு.2.30 க்கு கிளம்பினோம்.தேர் இன்னும் கிழக்கு வீதியை தாண்டவில்லை,தம்பி ஹரி அதற்கு சொன்ன காரணம் விசித்திரமாக இருந்தது.கீழ வீதியில் ஒரு மோர்காரியிடம் பெருமாள் கடன் வாங்கிவிட்டாராம் அவளுக்கு பயந்து மெதுவாக வருவாராம்.சுவாரசியமாகத்தான் இருந்தது.விருத்தாசலம் வந்து 3.50 மணிக்கு வைகை பிடித்து ஸ்டாண்டிங்கில் திருச்சிக்கு 5.50 க்கு வந்து சேர்ந்தோம்.

1 comment:

  1. நேர்முக வர்ணனை போன்று மிகவும் நேர்த்தியாக உங்கள் சொல்லாடல் இருந்தது.
    ஒரு இனிய பதிவை படித்த அனுபவத்திற்கு மிக்க நன்றி.

    ReplyDelete

உங்கள் எதிவினையை இங்கு பதியலாமே