308 ஆண்டுகளுக்கு
முன்னால் …..1706 ஆம் ஆண்டு ஜூலை 9ம் தேதி காலை 10 மணி க்கு தரங்கம்பாடியில் டென்மார்க்கு தேசத்தின் அரசன் நான்காம் பிரடெரிக் அவர்கள் உத்தரவின்பேரில் 23 வயது சீகன் பால்க்கும், அவரது நண்பர் 29 வயது ப்ளுட்சும் இந்தியாவிற்கு மிஷனெ ரியாக வந்து இறங்கினர்.(ஜீலை
3 ம் தேதிஏ வந்தாலும் கப்பலில் இருந்து தரங்கம் பாடி அழைத்து வர ஆளில்லை) ”புறஜாதியார் தேசத்திலே ஒரே ஒரு ஆத்துமா இரட்சிக்கப்படுவது, ஐரோப்பாவிலுள்ள ஒரு கிறிஸ்துவ தேசத்தில் 100 ஆத்துமாக்கள் இரட்சிக்கப்படுவதற்கு சமம்” இந்த வார்த்தைகள் சீகன் பால்க்கை மிசினரி ஊழியத்திற்கு அழைத்ததாகக் கருதப்படுகிறது.சீகன் பால்க் தரங்கம்பாடியின் கடற்கரை மணல் மீது பள்ளிப் பிள்ளைகளோடு அமர்ந்து பைபிளை தமிழ் மொழியில் மொழி பெயர்க்கும் பிரம்மாண்டப் பணிக்கான ஆரம்ப முயற்சியாகத் தமிழ் எழுத்துக்களின் வரிவடிவங்களை மணலின் மீது எழுதிப் பழகினார். தமிழ்நாட்டில் வந்து சேர்ந்த 5 ஆண்டுகளுக்குள்ளாக சீகன் பால்க் தமிழ் மொழியில் புதிய ஏற்பாட்டை மொழி பெயர்த்து முடித்தார். 1714ம் ஆண்டில் இந்திய மொழிகளிலே முதல் தடவையாக வேதாகமத்தைத் தமிழிலே அச்சிட்டார். 1719 ஆண்டில் தன்னுடைய 36 வயதில், மனைவியையும், இரண்டு மகன்களையும் விட்டுவிட்டு இறந்தார்.மெஷினரியாக
வந்த இவர் தமிழ் நாட்டில் செய்த பல வேலைகளுக்கு முன்னால் முதல் எனற வார்த்தையை சேர்த்துக்கொள்ள
தகுதிஉடையவர. அவரது உடல் தரங்கம்பாடியில் அவர் கட்டிய “புதிய எருசலேம்” ஆலயத்தில் பலிபீடத்தின் முன்பாக அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இவரது சிலை தரங்கம்பாடி கோட்டைக்குப் போகும் வழியில் உள்ளது.அதில்
முதன்முதலில் என்று ஆரம்பிக்கும் 24 சம்பவங்கள் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.அவற்றுள்
சில.
1.முதன் முதலில் இந்தியாவில் அச்சகத்தை ஆரம்பித்தவர்
2.முதன் முதலாக இந்தியாவில் காகித ஆலையை உருவாக்கியவர்.
3.முதன் முதல் இந்தியா வந்த பிரோட்டஸ்டண்ட் அருள்தொண்டர்.
4.முதன் முதலாக தமிழ் நாட்காட்டியை அச்சிட்டவர்
5.முதன்முதலாக புதிய ஏற்பாட்டை தமிழில் ம்ப்சிபெயர்த்து அச்சிட்டவர்
6.முதன் முதல் தமிழ் உரைநடையை அறிமுகப்படுத்தியவர்.
7.முதன் முதம் பெண்களுக்கான பள்ளியை துவங்கியவர்
8.முதன் முதல் பெண்களுக்கு தையல் கூடத்தை ஆரம்பித்தவர்.
9.முதல் முதல் இலவச மதிய உணவை பள்ளியில் துவக்கியவர்.
10.முதல் முதல் தமிழ் மொழியில் அருளுரை ஆற்றியவர்.
11.முதல் முதல் தமிழ் பொழியில் அகராதியை ஏற்படுத்தியவர்.
No comments:
Post a Comment
உங்கள் எதிவினையை இங்கு பதியலாமே