எங்கள் ஊரில் மூன்று சினிமா தியேட்டர்கள் இருந்தன. சந்தோஷ்குமார்,
ராஜேஸ்வரி, தங்கமணி, மொதகொட்டா, நடுகொட்டா, கடேசிகொட்டா, இப்படித்தான் எங்கள் மக்கள்
அத் திரையரங்குகளை பேரிட்டு அழைப்பார்கள். போனவாரம் விருத்தாசலம் போனபோது ”நடுகொட்டாய்”
பாழடைந்து இருந்ததைப்பார்த்தேன்.
”அவள் அப்படித்தான்”
1978 ல் வெளி வந்த போது (14 வயது)
நடுக்கொட்டாய் - ல் போய் பார்த்தேன் கொஞ்சநாள் முன்னால் அப்படத்தின் முழு படத்தி லிங்க் அறந்தை மணியன் https://www.facebook.com/aranthai.manian?fref=ts
அவர்கள் மூலமாக முகநூலில் https://www.youtube.com/watch?v=YKXXu4Dl_ps
கிடைத்து மீண்டும் அந்தப்படத்தை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது .வசனம் வண்ணநிலவன்,சோமசுந்தரேஷ்வர்,ருத்ரையா என டைட்டிலில் வரும்.செதுக்கிய வசனங்கள்.டாய்லெட் காட்சியைக்கூட அற்புதமாக காட்சி படுத்தியிருப்பார்.அந்த வயதில் அதற்கு முன் நான் பார்த்த படங்களில் இருந்து வித்தியாசமாக இருந்தது என்பது
மட்டும் புரிந்தது. அதற்கு மேல் என்ன புரிந்து விடப்போகிறது 14ல். அந்தப்படம். எங்கள் ஊரில் ஓடவில்லை. மூன்று நாளில் தூக்கிவிட்டார் செட்டியார்.
கொஞ்சநாட்களுக்குப் பிறகு மீண்டும்
நடுக்கொட்டாயிலேயே இப்படம் திரையிடப்பட்டு ஓடியது. அடுத்து கிராமத்து அத்யாயம் ….1980ல்
நந்தகுமார் கதாநாயகன். (அந்தக்கால பவர்ஸ்டார் மாதிரி இருப்பார்.)
பாரதிராஜாவே 77 ல் பதினாறுவயதினிலே கிராமத்து சப்ஜக்ட் எடுத்துவிட்டு
78 ல் சிகப்பு ரோஜாவுக்கு நகரத்துக்கு குடிபெயர்ந்தார். ருத்ரையா நகரத்திலிருந்து கிராமத்துக்கு
வந்து நட்டமானார். இளையராஜாவின் அற்புதமான பாடல் பட்டி தொட்டி எங்கும் அக்காலத்தில்
பாடப்பட்டது “ ”ஆத்துமேட்டுல ஒரு பாட்டு கேக்குது”.அதே படத்தில் “பூவே இது பூஜைக்காலமே”
பாடல் இளையராஜாவிடமிருந்து இளையராஜா காப்பி அடித்த மாதிரி இருக்கும். https://www.youtube.com/watch?v=HU_qgIJe7Mw
.”ஊதக்காத்து வீசயில குயிலு கூவையில” பாடல் பிரபலமானது.நல்ல படங்கள் ஏன் ஓடுவதில்லை
என்பற்கான ஸ்கேன் ரிப்போர்ட் எப்போதும் தப்பாகவே இருக்கிறது. எத்தனையோ படங்கள் ஓடாமல்
இருந்திருக்கிறது. அதனால் ஒரு சிலர் நட்டமடைந்திருக்கலாம். ஆனால் கிராமத்து அத்யாயம்
போன்ற படங்கள் ஓடாததால் ஒரு தலைமுறையே அற்புதமான இயக்குனரின் படைப்புகளை இழந்துள்ளது.அதற்குப்
பிறகு அவர் ஏதும் இயக்கியதாகத் தெரியவில்லை. அதற்குப்பிறகு இவர் என்ன செய்து கொண்டிருந்திருப்பார்
என தெரிந்துகொள்ள ஆவலாயிருக்கிறது .
இரண்டு படங்களை மட்டுமே தமிழில் இயக்கி தமிழ்த்திரைப்பட உலகில் தனக்கென தனியிடம் பிடித்த சிறப்புப்பட்டங்கள் ஏதும் பெறாத இயக்குனர் ருத்ரையா அவர்கள் மறைவு தமிழ்த்திரைஉலகத்துக்கான பெரும் இழப்பு.இவர் திருச்சியில்
படித்தவர்.பாலச்சந்தரிடம் உதவியாளராக இருந்தவர், டைட்டிலில் அனந்துவுக்கு நன்றி சொன்னவர்.இவர்
மீது வெறி கொண்டவர்கள் தமிழ் சினிமாவிலும் அப்பாலும் https://arunthamizhstudio.wordpress.com/2013/04/03/%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE/
நிறைய பேர் இருக்கின்றனர்.
No comments:
Post a Comment
உங்கள் எதிவினையை இங்கு பதியலாமே