Monday 28 December, 2009

வைகுண்ட ஏகாதசி

இன்று வைகுண்ட ஏகாதசி. காலையிலே 4.45 க்கு நம்பெருமாள் சொர்க்க வாசலை சர்ப்பகதியிலே கடந்து வந்ததை ஜெயா டி வி யிலே பார்த்தேன்.வருடா வருடம் இன்றய தினத்தில் ஸ்ரீரங்கம் செல்கிறேன்.சொர்க்கவாசல் மிதிக்கிறேன்.நம்பெருமாளை ஆயிரம்கால் மண்டபத்தில் சேவிக்கிறேன்.அடுத்த வருடமாவது நம்பெருமாளுடன் சொர்க்க வாசலை மிதிக்க வேண்டும்.பெருமாளின் அருள் வேண்டும்.சரி இன்றய நிகழ்வுக்கு வருவோம்.வடக்கு வாசல் மற்றும் தெற்கு வாசல் வழியாக என இரன்டு கியூ.நான் காலை 10.30க்கு ஜெயந்தியுடன் கோயில் சென்றேன்.தெற்கு வாசல் கியூ மேற்குவீதி தாண்டி வடக்கு வீதி துவக்கம் வரை நீண்டிருந்தது.வடக்கு வாசல் கியூ நீளம் குறைவு.ஜீயர்மடம் தாண்டி கொஞ்ச தூரம் மட்டும் இருந்தது.10.30க்கு கியூ வில் நின்றோம்.11.30க்கு நாழி கேட்டான் வாசல் அடைந்தோம்.அங்கிருந்து மூன்று பிரிவு.1.கம்பத்தடி ஆஞ்சனேயர் வழியாக முத்தங்கி சேவை முடித்து பரமபத வாசல் வர ரூ.300 க்கானது.2.மேற்கண்ட சேவைக்கான சாதாரண கட்டணம்.(இது கொஞ்சம் நீளம்) 3. நேராக ஒரே ஓட்டம் சோர்க்க வாசல் தான். நாங்கள் 3 வது. சொர்க்க வாசல் தாண்டி ஆயிரம் கால் மண்டபத்தில் நம்பெருமாள் சேவை. ரூ.20 க்கான கியூ.மிக அருகில் 20நிமிடங்களில் நம்பெருமாள் சேவை.சேவை முடித்து மண்ல் வெளியோரம் இருந்த பிரசாத ஸ்டாலில் புளியோதரை,வடை, மைசூர்பா,(விரதம் இல்லை).பிறகு நேராக தாயார் சன்னதி.திவ்ய தரிசனம்.அடுத்த வருடமாவது விரதம் இருக்க வேண்டும்.நம்பெருமாளுடன் சொர்க்க வாசல் மிதிக்க வேண்டும்.