Tuesday 9 August, 2011

பரனூர் Paranur

பரனூர் திருகோவிலூரிலிருந்து ( அரகண்ட நல்லூரிலிருந்து ) 7கிலோ மீட்டர்.ஸ்ரீ அண்ணா ஊர்.நாங்கள் 08.08.2011 அன்று அங்கு சென்று வர உத்தேசித்தோம்.அரகண்டநல்லூரில் வசிக்கும் எனது கல்லூரி நண்பன் கென்னடி வீட்டிற்குச் சென்றுவிட்டு அங்கிருந்து பரனூர் கிளம்பினோம்.கார் போகும் அளவுக்கு வாகான சாலை இருந்தும் சரியான பராமரிப்பு இல்லாததால் ஏழு கிலோ மீட்டரை அரை மணி நேரத்தில் அடைந்தோம்.
பரனூர்- ஒரு அக்ரஹாரத்தெருவில் முடிவில் ஸ்ரீ லக்‌ஷ்மி நாராயணர் கோவில்.ஸ்ரீகிருஷ்ணனுக்கு கோவில்.பெரிய பஜனை மண்டபம்.இந்தப்பகுதிகள் சில கோவில்களில் உள்ளது போல கல்லால் ஆன துவஜஸ்கம்பம் .நாங்கள் போன நேரம் மாலை 4.00 . கோவில் திறாந்திருந்தது.கோவிலை ஒட்டிய ஒரு பாடசாலையில் சிறுவர்கள் சந்தியாவந்தனம் செய்து கொண்டிருந்தனர்.அது பாடசாலை போல.அப்போது ஒரு காரில் ஸ்ரீஅண்ணா ( கிருஷ்ணப்பிரேமி ) அவர்கள் வந்திரங்கி பாடசாலை உள் சென்றார்.எப்போது அண்ணா பல ஊர்களுக்கும் சென்று கொண்டிருப்பார்.ஏகாதசி,துவாதசி ஆகிய தினங்களில் இங்கிருப்பாராம். இது தெரியாமலே நாங்கள் வந்திருந்தோம்.இது தான் கொடுப்பனை.அரை மணிநேரம் பாடசாலையை ஒட்டியிருந்த மகிழமரத்தின் குறுகிய நீளமான கீழிருந்த திண்ணையில் காத்திருந்தோம்.அண்ணாவை பார்க்க சிலர் வந்திருந்தனர்.நிறைய பூமாலை,துளசி பழங்கள் என தட்டு கூடை நிறைய வைத்துக்கொண்டு சிலர் காத்திருந்தனர்.எதற்காக காத்திருந்தனர் கோவிலுக்காகவா...இல்லை அண்ணாவுக்காகவா என எங்களுக்குத்தெரியவில்லை.நாங்களும் காத்திருந்தோம்.கொஞ்ச நேரத்தில் ஸ்ரீஅண்ணா பாடசாலையை விட்டு வெளியேவந்து வாயிற்படியில் உட்கார்ந்தார்.என்ன ஒரு தேஜஸ்.வந்திருந்தவர்கள் நமஸ்கரித்து ஆளுயர துளசிமாலையினை அணிவித்தனர்.எந்த ஒரு உணர்வும் அண்ணா முகத்தில் இல்லை.எல்லாம் கண்ணனுகே என இருந்தார்.பிறகு துளசி மாலையினை தலைமீது வைத்து கீழெ எடுத்து வைத்தார்.வந்தவரில் ஒருவரிடம் பேசினார். அவருக்கு பேரன் பிறந்திருக்கிறான் எனவும் பெயர் வைக்கவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.(மிகுந்த பவ்யத்துடன்).ஒருடைரி கொண்டுவந்திருந்தனர். அதில் பிறந்த தினத்தைனை எடுத்து அதில் குழந்தைக்கு பெயர் எழுதினார்.அந்த ஜீவன் புண்ணியம் செந்திருக்கிறது.
பிறகு நாங்களும் நமஸ்கரித்தோம்.பூவாவது வாங்கி வந்திருக்கலாம்.வெறும் கையுடன் நமஸ்கரித்தது ஒரு மாதிரியாக இருந்தது.இப்படியெல்லாம் இருக்கும் என எங்களுக்குத்தெரியாது.இருந்தாலும் அண்ணாவை பார்த்ததே இக்கண்கள் செய்த பாக்கியம் என பிறகு எல்லோரும் சொல்லும் போது உணர்ந்தேன்.நாளை ஏகாதசி என எனக்குத்தெரியாது,ஏகாதசி அன்று அண்ணா பரனூரில் இருப்பார் எனவும் எனக்குத்தெரியாது,எல்லாம் அவர் செயல்.போன வாரம் கோவிந்தபுரம் இந்தவாரம் பரனூர்,என இதெல்லாம் நான் மட்டும் திட்டமிடவில்லை என்பது மட்டும் உண்மை.

டி.கொளத்தூர் T.Kolathur

கிண்ணி பிள்ளையார் கோவில்
டி.கொளத்தூர் எனது பூர்வீகம்.வருடத்திற்கு ஒருமுறை ஆடிமாதம் மூன்று நாள் திருவிழா.6.08.11 பந்த சேர்வை.7.08.2011 மாரியம்மன் சாக்கை,08.08.11 திங்கள் கிழமை பிடாரியம்மன் எல்லை சுற்றுதல்.09.08.2011 செவ்வாய் மஞ்சள் நீராட்டு விழா.08 ம் தேதி காலையில் திருச்சியிலிருந்து கிளம்பினோம்.திருச்சி விழுப்புரம் சாலையில் மடப்பட்டு உள்ளது அங்கிருந்து திருக்கோவிலூர் செல்லும் வழியில் இருக்கிறது டி.கொளத்தூர்.(திருக்கோவிலூர் கொளத்தூர்).கொளத்தூர் ரோடிலிருந்து ஊர் 3 கி.மீ.போகும் வழியிலேயே வலப்புறம் கிண்ணி பிள்ளையார்.அதைத்தாண்டி கொஞ்ச தூரம் சென்றால் இடதுபுறம் அய்யணார் கோவில்.அய்யணார் தான் எங்கள் குலதெய்வம்.நாங்கள் கிண்ணி பிள்ளையார் தரிசித்துவிட்டு ஊருக்குள் போகும் போது பிடாரிஅம்மனுக்கு ஊர் ஊருணியிலிருந்து தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு நடந்து கொண்டிருந்தது.குளத்தை சுற்றி மக்கள் திரளாக திரண்டிருந்தனர்.பெண்கள் இந்த நிகழ்வின்போது அனுமதி இல்லை.ஊர் பரிவார தெய்வங்கள் சூழ தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு நடக்கும்.தீர்த்தம் எடுத்தவுடன் தீர்த்தம் எடுஒப்பவர் ஒரே ஓட்டமாக ஓடி பிடாரி கோவிலில் சென்றுதான் நிற்பார்.
ஊரில் எல்லா சாதியினருக்கும் உரிய மரியாதை வடிவமைக்கப்பட்டுள்ளது.அபிஷேகம் முடிந்ததும் கோவிலைச் சுற்றி மக்கள் அங்கப்பிரதட்சிணம்.சரியாக 12.00 மணிக்கு பிடாரி அம்மன் எல்லைச் சுற்ற கிளம்பி விடுகிறது.பிடாரி கிளம்பும்போது எதிரே வரக்கூடாது என பலரும் சொன்னார்கள்.


கிளம்பும் அழகு சொல்ல ஒன்னாது.என்ன ஒரு வேகம்.ஆவேசம்..எனது அப்பா,சித்தப்பா,தாத்தா,கொள்ளுத்தாத்தா, என எனது மூதாதையர்கள் எல்லாம் இந்த மாதிரிதான் பிடாரி தரிசன்ம் பார்த்திருப்பார்கள் என நினைக்கும் போது மனசு நெகிழ்ந்தது.
இந்தமுறை அண்ணா,தம்பி,நான் என மூவரும் அம்மா,சித்தியுடன்,குடும்பத்துடன் கலந்து கொண்டது திருப்தியாக இருந்தது.இரவு பிடாரி ஏழு ஊர் எல்லை சுற்றி இரவு அய்யனார் கோவிலுக்கு வரும்.பிறகு அய்யணார் பிடாரி கலியாணம்.
இது எங்கள் தாத்தாவின் அப்பா சுந்தரேசய்யர் கட்டிய கோவிலாம்


இரவுவரை சும்மா இருக்காமல் பரனூர் ,திருகோவிலூர் சென்றுவரலாம் என கிளம்பினோம்.

Thursday 4 August, 2011

ஆடிப்பெருக்கு

                               03.08.2011 ஆடிப்பதிணெட்டு.காலையிலேயே அகத்தில் சித்ரானங்கள்,தேங்காய்சாதம்,புளிசாதம்,எள்ளுசாதம்,தயிர்சாதம்,சர்க்கரைப்பொங்கல்)வாடாம் என சகலமும் நெய்வேத்யம். மோட்டார் ரூமையே காவிரியாக பாவித்து மஞ்சள் குங்குமம் இத்யாதி...யுடன் பூஜை முடிந்தது.




                                   மாலை ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சென்றோம்.வழியெல்லாம் விழாக்கோலம்.வகை வகையான புதுமணத்தம்பதிகள்.நீண்ட இடைவெளிக்குப் பிறகான சந்திப்பின் காரணமாக நடக்கும் போதும்,வண்டியில் போகும்போதும்,ஒரே ஈஷல், எழசல்கள்.கூட வரும் பெருசுகளுக்கு தர்மசங்கடம்.காவேரி பாலத்தில் இரண்டுபுறமும் கூட்டம் அலை மோதியது.கடலை,காரப்பொரி,பஞ்சுமிட்டாய்,கொழாபுட்டு,நாவல்பழம்,அன்னாசிப்பழம்,ஐஸ்வண்டி,என பல்வேறுபட்ட ஸ்டால்கள்.”திருச்சி காரர்களுக்கு இதுதான் மெரீனா கடற்கரை”



                                          சில நிகழ்வுகளைப் பார்த்த போது மனசு கரைந்தது.ஒரு சிறுவன் தள்ளாத அடிமேல் அடியெடுத்து நடந்த பாட்டியை கையைபிடித்து அழைத்துச்சென்றான்.(இதே போல ஒரு காட்சியை கோவிந்த புரத்திலும் கண்டேன்).ஒரு கிராமத்துப் பாட்டி ஐஸ்கிரீம் கடையில் தனது பேரனுக்காக ஐஸ்கிரீம் வாங்க பேரம் பேசிய பிறகு இடுப்பு பையிலிருந்து காசை என்ணிக் கொடுத்த காட்சி அதற்குள் பையனுக்கு இருப்புக் கொள்ளவில்லை, வாங்கி வாயில் வைத்தவன் முகத்திலும் அந்த பாட்டியின் சுருக்கம் விழுந்த முகத்தில் ஒரேமாதிரியான சந்தோஷம்.



                                                      அம்மாமண்டபத்தில் போலீஸ்பந்தோபஸ்து சிறப்பாக இருந்தது.மெடிகல் டீம் ஸ்டால் இருந்தது.வண்டியில் போகும்போது ஒரு வண்டு எனது கழுத்தில் பதம் பார்த்து விட்டது.முதலுதவியாக பெட்டிக்கடையில் சுண்ணாம்பு வாங்கி வத்தாள் ஜயந்தி.ஸ்டால் மருத்துவரிடம் காட்டினேன்,பிசிஎம் கொடுத்து போகும்போது ஸ்ரீரங்கம் ஜி.ஹெச் ல் டி.டி.போட்டுக்கொள்ளச் சொன்னார்கள்.
                                                ஆற்றின் படிதோறும் பெண்கள் கூட்டம்.எந்தப்படியிஉல் கால் வைக்க முடியவல்லை.இலை விரித்து ஒரே படையல் மயம்.ஒருவருக்கு ஒருவர் மாற்றி மாற்றி மஞ்சள் கயறு கட்டிக் கொண்டிருந்தார்கள்.சிலர் காப்பரிசி வழங்கிக் கொண்டிருந்தார்கள்.பெரியவர்களிடம் சிறியவர்கள் பொட்டு இட்டுக் கொடிருந்தார்கள்.கல்யாணத்தின் போது அணிந்த மாலைகளை கேரி பேக்கில் வைத்து மாப்பிள்ளைகள் சிலர் தூக்கி எரிந்து கொண்டிருந்தனர். கரையோரத்தில் குப்பைமயம். இதனை சுவாரசியாமாக சில வெளிநாட்டுப் பெண்மணிகள் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர்.நான் அவர்களை புகைப்படம் எடுத்தேன்.

                                        இதில் ஒரு விசேஷம் என்னவென்றால் மீடியேட்டர் அய்யர், அய்யங்கார்கள் இல்லை.எல்லம் மக்களே.காவிரித்தாய்க்கு ஒரு கோவில் அங்கே.அதில் தீபம் ஏற்றி வ்ழிபாடுகள் அமர்க்களமாக இருந்தது.கரைபுரண்டு ஓடிய நீர்பிரவாகத்தில் ஒரு சிறு தேர் அதில் சிலர் தொற்றிக்கொண்டு அழகாக பயணித்தார்கள் அனேகமாக இவர்கள் அனைவரும் கரையோரமாகவே எல்லா படித்துறைக்கும் நீந்திச்செல்வார்கள் போலிருக்கிறது.

                                                  வெளியே வரும் போது அம்மா மண்டபத்தில் அழகிய மணவாளன் இல்லை.இது ஒரு குறைதான்.ஜேஷ்டாபிஷேகம் செய்து 48 நாட்க்கள் முடியாததால் அவர் வெளியே வரமாட்டார்.நாம் தான் சென்று பார்க்க வேண்டும்.ஆடி 28 கு அம்மா மண்டபம் வருவார்.அங்கிருந்து கிளம்பி ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகில் (போலிஸ்ஸ்டேஷன் அருகில் ) இருக்கும் காபி கடையில் ஆளுக்கு ஒரு காபி சாப்பிட்டோம் ( ஒரு காபி ரூ9.00, டபரா டம்ளரில்தான் தருவர்கள் (டபராவா? டவராவா? என்ன மொழியோ ). ஸ்ரீரங்கம் வருபவர்கள் கண்டிப்பாக இங்கே ஒருமுறை காபி சாப்பிட வேண்டும்.எவர்சில்வர் கிண்டியிலிருந்து ஃப்பில்டர் டிகாஷன் ஊற்றி டிகிரி பால் சேர்த்து இவர்கள் வழங்கும் காபி அற்புதம்.காலையிலும் மாலையிலும் மட்டுமே கடை. காபி பால் தவிர வேறு ஏதும் கிடையாது.

                                                 மீண்டும் காவேரிப்பாலம் நாங்களும் கொஞ்சநேரம் பாலத்தில் நின்று கூட்டத்தையும் சலசச்லத்துச்செல்லும் ஆற்றையும் பார்த்தோம்.ஒரு அழகான பெண் சாலையில் நடக்கும் போது எல்லோர் கண்களும் அவள் மீது துளைக்கும்,..ஆனால் அவள் கண்டுகொள்ளாமல் தெனாவெட்டாக தி.ஜா வின் மோகமுள் நாயகி யமுனா மாதிரி நடந்து செல்வாள். எனக்கு காவிரியை பார்க்கும் போது அப்படித்தான் இருந்தது.இத்தனை கூட்டமும் என்னைப் பார்க்கத்தானே என்று ஒய்யாரமாக ஓடிக்கொண்டிருந்தாள் என் காவேரி.

 தி.ஜா வின் மோகமுள் நாயகி யமுனா