Sunday 31 July, 2011

கோவிந்தபுரம் விட்டல் கோவில்



இன்று காலை 31.07.2011 சோழன் எக்ஸ்ப்ரஸில் நானும்ஜயந்தியும் (9.15) கும்பகோணம் போனோம்.அங்கிருந்து ஆடுதுறை பஸ் பிடித்து (ஸ்டேஷன் வாசலிலேயே பஸ்வருகிறது.பஸ்ஸ்டண்டு போகவேண்டாம்) (4.00 ரூ டிக்கட்) கோவிந்த புரம் போனோம்.விட்டல் கோயில் வாசலிலேயே பஸ் நின்றது. நீண்ட கியூ சுவாமி பார்க்க. கோசாலை பிரம்மாண்டமாயிருக்கிறது.


கோசாலை முன் உள்ள கண்ணன் சிலை


200 பசுக்கள் இருக்கும். எல்லாமே பிருந்தாவனத்திலிருந்து கொண்டு வரப்பட்டவை.கண்ணண் மேய்த்த் பசுக்களின் வ்ழித்தோன்றலாயிருக்கும்.அனைத்து பசுக்களுக்கும் மின்விசிறி.மாட்டுக்கொட்டகை போலவேஇல்லை.கும்பாபிஷேகம் நடந்து 48 நாட்களுக்குள் பார்த்தல் விசேஷம் என்பதாலும், ஞாயிறு என்பதாலும் ஏகக் கூட்டம்.விட்டல் சன்னதிக்கு முன்பாக பெரிய தூணே இல்லாத மண்டபம்.அதைத்தாண்டி உள்ளே ஒரு மண்டபம்.மண்டபகூரைகளில் சக்குபாய்,போன்றவர்களின் கதைக்காட்சிகள் சிற்பமாக விதானத்தில் உள்ளன.மரக் கதவுகளில் சேங்காலிபுரம் அன்ந்தராம் தீட்சதர், விசிறிசாமியார்,இன்னும் சிலர் சிறபங்கள் மரத்தில் செதுக்கப் பட்டுள்ளன.ஜெயந்தி பூ தொடுத்து வந்திருந்தாள். நீங்களே சாற்றலாம் என சொல்லியதால் என்னிடம் கொடுத்தாள்.விட்டல் பாதத்தில் சமர்ப்பித்தேன்.தரிசனம் முடித்து பக்கத்திலேயே இருக்கும் போதேந்திராள் அதிஷ்டானம் சென்றோம்.ஜெயந்தி 10 வருடமாக எழுதி முடித்திருந்த ”ஸ்ரீராம ஜெயம் “ நோட்டுக்களை ஒப்படைத்தோம்.அட்சதையுடன் கூடிய திருநீர் பிரசாத பாக்கெட் இரண்டு கொடுத்தார்கள்.முடித்து வெளியே வந்தால் பசி.எடுத்துவந்திருந்த சாதத்தினை சாப்பிடவேண்டும். அதிஷ்டானத்திற்குப் பக்கத்திலேயே ஒரு சீமையோடு வேய்ந்த வீட்டின் முன்னே இங்கே “ பன்னீர் சோடா,பவண்டோ,அரிசிஅப்பளம்,வடாம்,ஊறுகாய் கிடைக்கும் என எழுதியிருந்தது”


”கல்கி விலை 4 அணா” போர்டும் இருந்தது.(கண்டிப்பாக 40 வருஷத்துக்கு முன்னதான போர்டாக இருக்க வேண்டும். இன்னும் மெருகு குலையாமல் இருப்பது ஆச்சரியம்.)உள்ளே சென்று ஒருமாமியிடம் அனுமதி வாங்கி திண்ணையில் வைத்து சாப்பிட்டோம்.பிறகு அவரிடமே அரிசி அப்பளம்(ரூ 50),மாவடு(ரூ70) வாங்கிக்கொண்டோம்.வரும் போது 6.20 க்குத்தான் புகைவண்டி என்பதால் பஸ்ஸிலேயே திருச்சி வந்து சேர்ந்தோம்.



.