Thursday, 14 April, 2011

கோதையின் பாதை

கதிரொளி தீபம் கலசமு டனேந்தி,

சதிரிள மங்கையர் தாம்வந்தெ திர்கொள்ள,

மதுரையார் மன்ன னடிநிலை தொட்டு,எங்கும்

அதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழீநான்.

இது வாரணமாயிரம்.நாச்சியார் திருமொழியின் ஆறாம் பதிகம்.

வார்த்தைப் பிரயோகங்களில் கோதையை மிஞ்ச யாருமில்லை.ஒரு

கன்னிப்பெண் கனவு. காளையாகட்டும், காதலனாகட்டும்,அதிரப் புகுதல்

என்ற உடன் தோன்றும் பிம்பங்களும்,உள் வெறியும், நம்மை

கிரங்கடிக்கிறது.


இதைப்படியுங்கள்.

நாளைவ துவைம ணமென்று நாளிட்டு,

பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ்,

கோளரி மாதவன் கோவிந்த னென்பான்,ஓர்

காளைபு குதக்க னாக்கண்டேன் தோழீநான்

கோதை மஞ்சுவிரட்டினை பார்த்திருக்க வேண்டும். ஒரு கூட்டத்திற்குள்

காளை புகுவதைக் கண்முன் கொண்டு வந்து பாருங்கள். பரிசுடை பந்தல் கீழ்

காளை வரக் கனா கண்டிருக்கலாம்.அவளது வார்த்தைப் பிரயொகம் ”புகுதக்”

என்ன ஒரு வெறி.

தொண்டரடிப்பொடியாழ்வார்.

இப்படியெல்லம் கூட வைணவ பக்தி இருந்திருக்கிறது.என்ன ஒரு வன்மம் இந்த பாசுரத்தில்.
”பச்சைமா மலைபோல் மேனி ” போன்ற மென்மையான உணர்வுகளை பதிவு செய்யும் பாசுரங்களை இயற்றிய தொண்டரடிப் பொடியாழ்வாரின் பாசுரம் தான் இது. அந்த அளவிற்கு சமண , பவுத்தர்களின் அராஜகம் இருந்ததா அல்லது அவர்களின் வளர்ச்சி கண்டு பொறுக்க மாட்டாமல் இவர்கள் இருந்தார்களா தெரிய்வில்லை. என்ன இருந்தாலும் “தலையை அறுக்கும் கருமம் கொஞ்சம் ஓவர் தான்”

.
வெறுப்பொடு சமணர் முண்டர்
விதியில்சாக் கியர்கள், நின்பால்
பொறுப்பரி யனகள் பேசில்
போவதே நோய தாகி
குறிப்பெனக் கடையு மாகில்
கூடுமேல் தலையை ஆங்கே,
அறுப்பதே கருமங் கண்டாய்
அரங்கமா நகரு ளானே.


இந்தப்பசுரமும் இவரது தான் என்ன ஒரு உருக்கம் பாருங்கள்.படியுங்கள்.கதறுங்கள்

ஊரிலேன் காணி யில்லை
உறவுமற் றொருவ ரில்லை,
பாரில்நின் பாத மூலம்
பற்றிலேன் பரம மூர்த்தி,
காரொளி வண்ண னே.(என்
கண்ணனே. கதறு கின்றேன்,
ஆருளர்க் களைக் ணம்மா.
அரங்கமா நகரு ளானே.

Wednesday, 13 April, 2011

சேஷ ராயர் மண்டபம்

பாயும் குதிரையுடன் போர்க்களக்காட்சி

குதிரையின் வால்.யானை மீதிருந்து புலியைக் கொல்லும் வீரன்.

(வீரனின் உடல் மொழி வியக்கத்தக்கதாய் இருக்கிறது ஓவியத்தில் மட்டுமே இது சாத்தியம்.)இது என்ன என்று தெரியவில்லை, தலைக்குப் பதிலாக மரம் இருக்கிறது, ஏதாவது புராணக் காட்சி யாக இருக்கலாம்.
அந்தக்கால ஜிம்நாஸ்டிக்ஸ். ( கழைக்கூத்தாடிகளா?)

நோ கமெண்ட்ஸ்.வெள்ளை கோபுரம் பி புலத்தில்.
சீன வீரர்களாக இருக்க வேண்டும், மீசை வித்தியாசத்தைப் பாருங்கள்.

நின்ற நிலையில் நரசிம்மர்.


ஸ்ரீரங்கம் கோவிலில் சேஷ ராயர் மண்டபம் சிற்ப வேலைப்படுகளூடன் கூடிய அழகிய மண்டபம். கிழக்கு வெள்ளை கோபுர வாயிலின் வழியாக உள்நுழையும் போது இடது புறம் இருக்கிறது சேஷ ராயர் மண்டபம். இது கிருஷ்ணதேவராயர் காலத்தில் (கி.பி.1509-1529) அமைக்கப்பட்டதாகத் தெரிகிற்து.ஒரு வரிசைக்கு 12 தூண்கள் என எட்டு வரிசைத் தூண்களைக்கொண்டது இம் மண்டபம்.முதல்வரிசை 8 தூண்களிள் தான் அற்புதமான சிற்பங்கள் உள்ளன. வாலிசுக்ரீவ வதம், தொங்கு மீசை கொண்ட சீன வீரர்கள்,தொடையில் சொறுகி வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் கத்தி,ஜிம்நாஸ்டிக்,யானை மீதிருந்து புலியை லாவகமாக ஈட்டியால் சொறுகும் வீரன் என நுனுக்கமான சிற்பங்கள் நிறைந்துள்ளது.
பார்த்து ரசித்து வியக்க வேண்டிய ஒரு மண்டபம் இது.

Sunday, 10 April, 2011

உத்தமர்கோவில்

09.03.2011 திருச்சிக்கு அருகிக் உள்ள உத்தமர் கோவில் சென்றுவந்தோம்.திருச்சியிலிருந்து 15 கீ.மீ தொலைவில் உள்ளது.பிரம்மா, விஷ்ணு,சிவன் என மூன்று தெய்வங்களும் குடிகொண்டுள்ள கோயில். கோயிலின் உள்ளே வளைத்து வளைத்து ஏகபட்ட சன்னதிகள். கிழக்கு நோக்கி பெருமாள் மேர்கு நோக்கி சிவன் சண்டிகேஸ்வரர், துர்க்கை,அனுமன்,அம்பாள் சன்னதி , தாயார் சன்னதி என நிறைய சன்னதிகள்.திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம். ஊரின் பெயர் பிச்சாண்டார் கோவில்.

ஸ்ரீரங்கத்தில் இன்று பூச்சாத்து.நம்பெருமாள் கோடைமண்டபத்தில் பூக்களுடன் காட்சிதந்தார்.நாங்கள் வடக்கு வாசல் வழியாக உள்ளே செல்லும் போது பட்டாபிராமர் சன்னதி வழியாக நம்பெருமாள் வந்து கொடிருந்தார்.பக்தர்கள் கையில் தொடுத்த பூச்சரத்தினை வைத்துக் கொண்டு காத்திருந்தனர். சாத்தாதார் சிலர் அப்பூச்சரங்களை பெற்று கையில் அடுக்கியபடி வந்தனர். நானும் வீட்டில் பூத்த சில மனோரஞ்சிதப்பூக்களை கொடுத்தேன். உதிர்ந்து விடும் தொடுத்ததாய் இருந்தால் பரவாயில்லை என சொன்னார். அடுத்தமுறை தொடுத்து கொண்டுவரவேண்டும்.

பி-கு
பிர்மாநந்தா சர்பத் ரூ 10 ஆகிவிட்டது

தேர்தல் ஆணைய கெடுபிடியினால் திருவிழாபோலவே இல்லை. துக்க வீடு போல ஊரே களையிழந்து இருக்கிறது.