Sunday 22 September, 2013

புரட்டாசி சனிக்கிழமை

புரட்டாசி சனிக்கிழமை .நேற்று ஸ்ரீரங்கத்தில் டி.வி.எஸ் ஊழியர்கள் மிக அருமையாக தொண்டு செய்தனர்,கூட்ட நெரிசல் இல்லாமல் பார்த்துக் கொண்டனர்.வி.ஐ.பி யாக இருந்தாலும் ரூ.250 கியூ மூலமாக மட்டுமே வரவேண்டும்.தேவையற்ற தேக்குதல் இல்லை.காத்திருக்கும் வேலைஈலை.கியூ நகர்ந்து கொண்டே இருந்தது.மிக எளிதில் மூலஸ்தானம் செல்ல முடிந்தது.வாழ்த்துக்கள்.

மதியம் மதுராகபே சாப்பாடு.தாயார்,மூலவர்,சக்கரத்தாழ்வார் சேவை,மாலை முரளிகாபி...பேஷ்...பேஷ்..நேற்றைய நாள் அருமை.


Sunday 15 September, 2013

திருநீர்மலை

நீண்ட நாட்களாக தரிசிக்க வேண்டும் என நினைத்திருந்த திருநீர்மலை ஷேத்திரத்தை தரிசிக்க ஒரு வாய்ப்பு இப்போது கிடைத்தது.பல்லாவரத்திலிருந்து இடது பக்கம் பிரியும் சாலையில் ஒரு 3 கி.மீ தாண்டிய உடனேயே சென்னை பரபரப்பு அடங்கி சாலை ஏதோ குக்கிராமத்திற்கு வந்து விட்ட உணர்வு வ்ந்துவிடுகிறது.செல்லும் வழியில் உயர்ந்த ஏரிக்கரை.வண்டியை நிறுத்திவிட்டு ஏரிக்கரையில் ஏறி பார்த்தால் பிரம்மாண்டமான ஏரி.நீர் நிறைந்து காணப்பட்டது.பல்வேறு விதமான பறவைகள் வெள்ளையும் கருப்புமாக பெரிய பெரிய சைசில் நீரில் நீந்திக்கொண்டிருந்தன.வேடந்தாங்கல் வந்துவிட்டோமா? என்கிற உணர்வு வந்து விடுகிறது.
கோவில் காலை எட்டு மணிக்கு மேல்தான் திறக்கிறார்கள்.கீழே ஒரு கோவில்.மலைமீது ஒரு கோவில்.

இது கீழே உள்ள கோவில்.



மலைமேல் நின்றகோலம் ,கிடந்தகோலம்,இருந்தகோலம் என மூன்று பெருமாள் அருள்பாலிக்கிறார்.














செட்டிப்புண்ணியம்

பிரசித்திபெற்ற செட்டிப்புண்ணியம் ஸ்ரீ தேவநாதப் பெருமாள்  யோக ஹயக்ரீவர் கோவிலில் உள்ளது இம்மரம்.


சிங்கபெருமாள் கோவில்

சிங்க பெருமாள் கோவில் - ரயில் மார்க்கமாக சென்னை செல்லும் போது இந்த பெயரை பெயர்ப்பலகையில் பார்த்ததுண்டு.இந்த முறை நேரில் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.அழகான கோவில்.பல்லவர்கால குடைவரைக் கோவில்.




பாடலாத்ரி நரசிம்மப்பெருமாள்.இங்கு நரசிம்மர் வலது காலை மடித்து இடது காலை தொங்க விட்ட வண்ணம் இருப்பது புதுமையானது.இது சிற்பியின் தவறாகக் கூட இருக்கலாம்.பெரும்பாலும் நரசிம்மப் பெருமாள் சிலை இடது காலை மடித்து வலதுகாலை தொங்க விட்டபடித்தான்  இருக்கும்.இங்கு சற்று மாற்றம்.”பாடலம்” என்றால் சிவப்பு என்றும் ”அத்ரி” என்றால் மலை என்றும் அர்த்தம் என எழுதி போட்டுள்ளார்கள்.மலை சிவப்பு நிறக்கல்லாக இருப்பதனால் அந்த பெயர் போலிருக்கிறது.பிரம்மாண்ட புராணத்தில் இத் தலம் பற்றிய குறிப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.மூன்றாவது கண் இருக்கிறது நரசிம்மப் பெருமாளுக்கு.கோவிலை பிரதட்சிணம் வரும் போது சற்றே சிறிய குன்றில் ஏறி இறங்கி தான் வரவேண்டும்.சிறிய (ரொம்ப சிறிய) தொன்னையில் புளியோதரை விலைக்குக் கிடைக்கிறது.பிரதோஷ காலம் ரொம்ப விசேஷம்.