Saturday 20 September, 2014

புரட்டாசி முதல் சனிக்கிழமை

. “போதரே என்று சொல்லி புந்தியில் புகுந்து தன் பால் ஆதாரம் பெருக வைத்த அழகனூர்” ஸ்ரீரங்கத்தில் இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை பெரியபெருமாள் , தாயார், சக்கரத்தாழ்வார்,சேவை.பெருமாள் என்னை நோக்கி எட்டு அடி எடுத்துவைக்கிறார் நான் ஒரு அடி எடுத்து வைத்தால்.சக்கரத்து ஆழ்வார் சன்னதி சன்னல் ஓரம் பெயர்க்கப்பட்டு புதிய வேலைப்பாடுடன் கூடிய பூச்சு வேலை நடந்து வருகிறது.கோவிலில் ஆங்காங்கே அனடபத் தூணை வளைத்து பிற்காலத்தில் அறைகளாக தடுக்கப் பட்டிருந்த பல பகுதிகள் இடிக்கப்பட்டு வருகிறது.குறிப்பாக தாயார் சன்னதி வலப்புறம் பெரிய இடம் இதுநாள் வரை தெரியாமலே இருந்தது.பெருமாள் தைலக் காப்பு. பாதி உடல் ஒரு திரையிட்டு மூடப்பட்டிருந்தது.எண்ணை பூசிய முகத்துடன் கருகரு வென மின்னிக்கிடந்தார்.நம்பெருமாள் கலையிலேயே புரப்படு ஆகி சந்தனு மண்டபத்தில் இருந்தார்.நான் தான் பார்க்கவில்லை.கோவிலில் ம்துரையிலிருந்து வந்திருந்த ஒரு பெண்கள் கூட்டம் பச்சைப்புடவை கட்டிக்கொண்டு ஆங்காங்கே அதிகாரம் செய்துகொண்டிருந்தார்கள்.இதன் பெயர் கைங்கர்யமாம்.அந்தோ.....சக்கரத்தாழ்வார் சன்னதியில் ஒரே கூச்சல்...வேண்டி வருபவர்கள் மனது ஒருமுகப்படுத்த முடியாத அளவுக்கு இவர்களின் காட்டுக் கூச்சல்.நிர்வாகம் இதன் மீது கவனம் செலுத்த வேண்டும். தாயார் சன்னதியிலோ சின்ன இடம் சேவை முடிந்து தாயாரை பார்க்க விரும்புவர்கள் கொஞ்சம் வரிசையில் வருபவர்களுக்கு இடம்விட்டு  பின்னால் தள்ளி நின்றுகொண்டு  பார்க்கலாம்.இந்த மகளிர் கூட்டம் அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்துகொண்டு ஒரே ஆரவாரம். சரி இதையெல்லாம் பார்க்கவா வந்தோம் என புத்தியை தாயார் மீது திருப்பி தரிசனம் முடித்தேன்.ஸ்ரீரங்கம் மேல சித்ரவீதியில் கோதை வீடு.அவள் கணவருக்கு ராமர் கோயில் கைங்கர்யம்.தட்டு நிறைய வெண்பொங்கலும் சட்னியும் வைத்துக் கொடுத்தாள்.தேவாமிர்தம், விடுமுறைக்கு வந்த பிள்ளை மீண்டும் ஊருக்குப் போகும்போது அம்மா இத எடுத்துண்டு போ, அத எடுத்துண்டு போ,,, என சொல்வது மாதிரி ரவாலாடு இதுல வெச்சிருக்கேன்,இந்த டப்பாவுல சீடை வெச்சிருக்கேன் என எல்லா வற்றையும் மனைவி கையில் திணித்தாள் கோதை. என்னோடு பணியாற்றியவள் ஓய்வு பெற்றுவிட்டவள்.என்ன கைமாறு செய்யமுடியும் இந்த அன்பிற்கு.நினைவில் நிற்கும் முக்கால் டம்ளர் காபி “ மற்றொன்றும் வேண்டா மனமே” என திருப்தி பட்டுக்கொண்டே வெளியில் வ்ந்தோம்.ஸ்ரீரங்கத்தில் இருந்து கொண்டு கோதை சொன்னது.ரங்கா பிடிக்கவில்லை ஜோசப்தான் பிடித்திருக்கிறது.
பி.கு 
ரங்காவும் ,ஜோசப்பும் காபிபொடி கடைகளின் பெயர்.