Thursday 14 April, 2011

கோதையின் பாதை

கதிரொளி தீபம் கலசமு டனேந்தி,

சதிரிள மங்கையர் தாம்வந்தெ திர்கொள்ள,

மதுரையார் மன்ன னடிநிலை தொட்டு,எங்கும்

அதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழீநான்.

இது வாரணமாயிரம்.நாச்சியார் திருமொழியின் ஆறாம் பதிகம்.

வார்த்தைப் பிரயோகங்களில் கோதையை மிஞ்ச யாருமில்லை.ஒரு

கன்னிப்பெண் கனவு. காளையாகட்டும், காதலனாகட்டும்,அதிரப் புகுதல்

என்ற உடன் தோன்றும் பிம்பங்களும்,உள் வெறியும், நம்மை

கிரங்கடிக்கிறது.


இதைப்படியுங்கள்.

நாளைவ துவைம ணமென்று நாளிட்டு,

பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ்,

கோளரி மாதவன் கோவிந்த னென்பான்,ஓர்

காளைபு குதக்க னாக்கண்டேன் தோழீநான்

கோதை மஞ்சுவிரட்டினை பார்த்திருக்க வேண்டும். ஒரு கூட்டத்திற்குள்

காளை புகுவதைக் கண்முன் கொண்டு வந்து பாருங்கள். பரிசுடை பந்தல் கீழ்

காளை வரக் கனா கண்டிருக்கலாம்.அவளது வார்த்தைப் பிரயொகம் ”புகுதக்”

என்ன ஒரு வெறி.

No comments:

Post a Comment

உங்கள் எதிவினையை இங்கு பதியலாமே