Thursday 8 January, 2009

வெளியில் தெரியாத ரசிகர் மன்றங்கள்.

திருச்சியில் வெளியில் தெரியாத பல ரசிகர்மன்றங்கள் உண்டு.இப்போது சாரதாஸ் ஜவுளிக்கடைக்கு என்று பிரத்யேகமான ரசிகர் கூட்டங்கள் உண்டு. என்ன தான் மழை பொழிந்தாலும், வெயில் அடித்தாலும் அந்தக்கடையில் தான் துணிமணிகள் எடுக்கவேண்டும் என பிடிவாதமாக இருக்கும் மனிதர்கள் உண்டு.பக்கத்து கிராமங்களில் இருந்து சாப்பாடு கட்டிக் கொண்டு வந்து துணிமணிகளை எடுத்துவிட்டு அந்த ஹாலிலேயே ஒரு ஓரமாக கொன்டுவந்த உணவை உண்ணும் குடும்பத்தினரை பார்த்திருக்கிறேன்.இது சென்டிமென்ட் காரணமாக கூட இருக்கலாம்.சிறு வயதில் தீபாவளிக்கு அப்பாவுடன் சாரதாஸ் வந்து துணிகள் எடுத்த மகன் அதே நினவலைகளுடன் இன்று தன் குடும்பத்துடன் இங்கு வ்ந்து விடுகிறார்போலும்.இவர்களுக்கு சாரதாஸ் மஞ்சள் பை வந்தால் தான் தீபாவளி வந்த மாதிரி இது மதம் தாண்டி இஸ்லாமிய மக்கள் ரம்ஜான் காலத்திலும், கிருத்துவர்கள் கிருஸ்துமஸ் காலத்திலும் இங்கு குழுமுவது வாடிக்கை.( ஆனால் நான் சாரதாஸில் துணி எடுப்பதில்லை என்பது வேறு விஷயம் கூட்டமே எனக்கு அலர்ஜி)இதே போல திருச்சி யில் பிர்மானந்தா சர்பத்,மார்கெட் ஜிகிர்தண்டா,கிருஷ்னா ஆயில் மில்,இப்படி அறிவிக்கப்படாத ரசிகர் மன்ற்ங்கள் ஏராளம். இது ஏன் இங்கே என்கிறீர்களா? நானும் ஒரு ரசிகர் மன்றத்துக்காரன் தான். அடுத்தப் பதிவில் அதை பற்றி எழுதுகிறேன்.

bullet

No comments:

Post a Comment

உங்கள் எதிவினையை இங்கு பதியலாமே