


படம் 3 வசந்தமண்டபம் மூடிய கேட்டிற்கு வெளியிலிருந்து
28.02.2009 இன்று நம்பெருமாள் முn மண்டபத்திலேயே சேவை.கோதை சொன்னது போல பெருமாள் "தேமேன்னு" இருந்தார்.இப்போது மனோரஞ்சிதம் சீசன் போல. ஸ்ரீரங்கத்தில் பல கடைகளில் மனோரஞ்சித பூவை பார்க்க முடிந்தது.தாயார் தரிசனம் நன்கு கிடைத்தது.தாயார் சன்னதியில் வேளுகுடி கிருஷ்ணன் அவர்களை பார்த்தேன். சக தர்மினியோடு வந்திருந்தார்.என்ன ஒரு தேஜஸ்.நீக்ரோவிற்கு இருப்பது மாதிரி சுருள் முடி. பாதி தலை மழுங்கடிக்கப்பட்டிருந்தது.கிஞ்சித்காரம் ஆடியோ சிடியில் இவரது உபன்யாசம் கேட்டிருக்கிறேன்."பாகவத முத்துக்கள்" இவரது சிறப்பான பேச்சு.எப்போது நேரில் கேட்க்கப் போகிறேன் தெரியாது.பெருமாள் அனுக்கிரஹம் வேணும்.
பி.கு
ஸ்ரீரங்கத்தில் மட்டும் தான் இன்னும் பாவாடை சட்டை, பாவாடை தாவணியில் லட்சணமான குழந்தைகளை பார்க்க முடிகிறது.
இன்றய பிரசாதம் தோசை எலுமிச்சங்காய் ஊறுகாய்.
தகவல்: அப்பம் மாலையில் தான் கிடைக்கும்.
தட்பவெப்பம்: ஸ்ஸ்ஸ்ஸ்ஸ....என்ன வெய்யில்...காவிரி படுத்தவன் மார்பில் பூணல் மாதிரி ஒரு ஓரமாக நெளிந்து செல்கிறது.
No comments:
Post a Comment
உங்கள் எதிவினையை இங்கு பதியலாமே