Tuesday 9 August, 2011

டி.கொளத்தூர் T.Kolathur

கிண்ணி பிள்ளையார் கோவில்
டி.கொளத்தூர் எனது பூர்வீகம்.வருடத்திற்கு ஒருமுறை ஆடிமாதம் மூன்று நாள் திருவிழா.6.08.11 பந்த சேர்வை.7.08.2011 மாரியம்மன் சாக்கை,08.08.11 திங்கள் கிழமை பிடாரியம்மன் எல்லை சுற்றுதல்.09.08.2011 செவ்வாய் மஞ்சள் நீராட்டு விழா.08 ம் தேதி காலையில் திருச்சியிலிருந்து கிளம்பினோம்.திருச்சி விழுப்புரம் சாலையில் மடப்பட்டு உள்ளது அங்கிருந்து திருக்கோவிலூர் செல்லும் வழியில் இருக்கிறது டி.கொளத்தூர்.(திருக்கோவிலூர் கொளத்தூர்).கொளத்தூர் ரோடிலிருந்து ஊர் 3 கி.மீ.போகும் வழியிலேயே வலப்புறம் கிண்ணி பிள்ளையார்.அதைத்தாண்டி கொஞ்ச தூரம் சென்றால் இடதுபுறம் அய்யணார் கோவில்.அய்யணார் தான் எங்கள் குலதெய்வம்.நாங்கள் கிண்ணி பிள்ளையார் தரிசித்துவிட்டு ஊருக்குள் போகும் போது பிடாரிஅம்மனுக்கு ஊர் ஊருணியிலிருந்து தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு நடந்து கொண்டிருந்தது.குளத்தை சுற்றி மக்கள் திரளாக திரண்டிருந்தனர்.பெண்கள் இந்த நிகழ்வின்போது அனுமதி இல்லை.ஊர் பரிவார தெய்வங்கள் சூழ தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு நடக்கும்.தீர்த்தம் எடுத்தவுடன் தீர்த்தம் எடுஒப்பவர் ஒரே ஓட்டமாக ஓடி பிடாரி கோவிலில் சென்றுதான் நிற்பார்.
ஊரில் எல்லா சாதியினருக்கும் உரிய மரியாதை வடிவமைக்கப்பட்டுள்ளது.அபிஷேகம் முடிந்ததும் கோவிலைச் சுற்றி மக்கள் அங்கப்பிரதட்சிணம்.சரியாக 12.00 மணிக்கு பிடாரி அம்மன் எல்லைச் சுற்ற கிளம்பி விடுகிறது.பிடாரி கிளம்பும்போது எதிரே வரக்கூடாது என பலரும் சொன்னார்கள்.


கிளம்பும் அழகு சொல்ல ஒன்னாது.என்ன ஒரு வேகம்.ஆவேசம்..எனது அப்பா,சித்தப்பா,தாத்தா,கொள்ளுத்தாத்தா, என எனது மூதாதையர்கள் எல்லாம் இந்த மாதிரிதான் பிடாரி தரிசன்ம் பார்த்திருப்பார்கள் என நினைக்கும் போது மனசு நெகிழ்ந்தது.
இந்தமுறை அண்ணா,தம்பி,நான் என மூவரும் அம்மா,சித்தியுடன்,குடும்பத்துடன் கலந்து கொண்டது திருப்தியாக இருந்தது.இரவு பிடாரி ஏழு ஊர் எல்லை சுற்றி இரவு அய்யனார் கோவிலுக்கு வரும்.பிறகு அய்யணார் பிடாரி கலியாணம்.
இது எங்கள் தாத்தாவின் அப்பா சுந்தரேசய்யர் கட்டிய கோவிலாம்


இரவுவரை சும்மா இருக்காமல் பரனூர் ,திருகோவிலூர் சென்றுவரலாம் என கிளம்பினோம்.

No comments:

Post a Comment

உங்கள் எதிவினையை இங்கு பதியலாமே