Sunday, 15 September 2013

சிங்கபெருமாள் கோவில்

சிங்க பெருமாள் கோவில் - ரயில் மார்க்கமாக சென்னை செல்லும் போது இந்த பெயரை பெயர்ப்பலகையில் பார்த்ததுண்டு.இந்த முறை நேரில் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.அழகான கோவில்.பல்லவர்கால குடைவரைக் கோவில்.




பாடலாத்ரி நரசிம்மப்பெருமாள்.இங்கு நரசிம்மர் வலது காலை மடித்து இடது காலை தொங்க விட்ட வண்ணம் இருப்பது புதுமையானது.இது சிற்பியின் தவறாகக் கூட இருக்கலாம்.பெரும்பாலும் நரசிம்மப் பெருமாள் சிலை இடது காலை மடித்து வலதுகாலை தொங்க விட்டபடித்தான்  இருக்கும்.இங்கு சற்று மாற்றம்.”பாடலம்” என்றால் சிவப்பு என்றும் ”அத்ரி” என்றால் மலை என்றும் அர்த்தம் என எழுதி போட்டுள்ளார்கள்.மலை சிவப்பு நிறக்கல்லாக இருப்பதனால் அந்த பெயர் போலிருக்கிறது.பிரம்மாண்ட புராணத்தில் இத் தலம் பற்றிய குறிப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.மூன்றாவது கண் இருக்கிறது நரசிம்மப் பெருமாளுக்கு.கோவிலை பிரதட்சிணம் வரும் போது சற்றே சிறிய குன்றில் ஏறி இறங்கி தான் வரவேண்டும்.சிறிய (ரொம்ப சிறிய) தொன்னையில் புளியோதரை விலைக்குக் கிடைக்கிறது.பிரதோஷ காலம் ரொம்ப விசேஷம்.



No comments:

Post a Comment

உங்கள் எதிவினையை இங்கு பதியலாமே