Friday 27 March, 2009

பெரிய திருவடி

ஸ்ரீரங்கத்தில் கருடாழ்வார் சன்னதியின் பின்புறச் சுவரை ஒட்டியில்லாமல் நடுவிலேயே கருடர் சிலை இருக்கிறது . அவரது பின்புறம் மற்றொரு சுவர் எழுப்பப்பட்டிருக்கிறது. கருடரின் பின்னால் ஒரு ரகசிய அறை இருப்பதாகவும், அதில் தங்கம், வெள்ளி என்று பொக்கிஷங்கள் புதைக்கப்பட்டிருப்பதாகவும் ஒரு வதந்தி. அந்த வதந்திக்கு வலு சேர்ப்பதுபோல் ஜன்னல்களின் இடைவெளிகளும்கூட அடைக்கப்பட்டு உள்ளது. முஸ்லிம் மன்னர்களின் படையெடுப்பின்போது, கோயில் நகைகளைக் காப்பாற்ற அங்கே பொக்கிஷங்கள் குவிக்கப்பட்டுவிட்டதாகச் சொல்கிறார்கள்.ஆஜானுபாகுவான கருடரைக் காணும் போதெல்லாம் அவர் பின்னால் உள்ளதாக கூறப்படும் பொக்கிஷம் நினைவுக்கு வருகிறது.மருந்தை சாப்பிடும் போது குரங்கை நினைக்கக் கூடாது என்ற கட்டளை போல.கருடாழ்வார் சன்னதிக்கு முன் உள்ள தூணில் செதுக்கப்பட்டுள்ள நாயக்கர் சிலைகளின் பினிஷிங் அப்பா...தொட்டுப்பார்க்கத் தூண்டும்.

1 comment:

  1. நேற்றுதான் ஸ்ரீரங்க கருடாழ்வாரைப் பற்றிச் சினேகிதியிடம் சொல்லிக் கொண்டு வந்தேன். திருவள்ளூர் பெருமாளைத் தரிசனம் செய்து வெளியே வரும்போது ,இருந்து அருள் பாலிக்கும் கருட பகவானைச் சேவிக்கும்போது எல்லாக் கருடன் களும் நினைவுக்கு வந்தார்கள். நீங்கள் எழுதியதைப் படிக்க இன்னிக்கு பாக்கியம் போலிருக்கு

    ReplyDelete

உங்கள் எதிவினையை இங்கு பதியலாமே