Sunday 11 September, 2011

02.09.2011 திருமலை பயணம் 2

பாலு  ஜெயங்கொண்டத்தில் இருக்கிறான்.மனைவியுடன் விருத்தாசலத்திலிருந்து பல்லவனில் ஏறிக்கொள்வதாக கூறினான்.கென்னடி வீட்டில் இரு மக்களுடன் நான்குபேர் விழுப்புரத்தில் ஏறிக்கொள்வதாகக் கூறினான்,எல்லாம் ஏற்பாடு ஆயிற்று.ரூம் தவிர.இவ்வளவு செய்த பெருமாள் அதையும் கொடுப்பார்.பூமிநாதன் விருத்தாசலந்திலிருந்து ஏறிக் கொள்வதாக கூறினார்.திருச்சி முதல் சென்னைவரை பல்லவன் ஏ.சி கிடைக்க வில்லை.சென்னை முதல் திருப்பதி வரை ஏ.சி இருந்தது.அதுபோலவே 5.9.11 திருப்பதி முதல் சென்னை வரை ஏ.சி இல்லை சப்தகிரி எக்ஸ்ப்ரஸ்.சென்னை முதல் விழுப்புரம் விருத்தாசலம் ,திருச்சி வரை ஏ.சி இருந்தது.புக் செய்த பிறகு மறுநாள் பூமிநாதன் சில காரங்களால் வரமுடிய வில்லை எனகூரியதால்.அவரது டிக்கட் மட்டும் கேன்சல் செய்தோம்.
கென்னடி கேட்டுக் கொண்டதால் கடைசிநேரத்தில் திரும்பும் நாள் 05.09.11 க்கு பதிலாக 04.09.2011 என மாறியது.அதனால் டிக்கட் ஏ.சி கிடைக்கவில்லை.
02.09.11 காலை நான்,ஜயந்தி,ம்கன் விபினுடன் பல்லவனில் ஏறிக்கொண்டோம்.எப்போதும் பயணம் எனக்குச் சலிப்பதில்லை.அதுவும் திட்டமிட்ட பயணம் சுகம்.திட்டமிடாத பயணம் குடும்பத்துடன் செல்வது சோர்வை ஏற்படுத்தும்.எந்த வேலையை எடுத்தாலும் ”ஏண்டா எடுத்தோம்” என நினைக்கும் நிலை வரக்கூடாது.விருத்தாசலத்தில் பாலு மனிவியுடன் ஏறிக்கொண்டான்.பாலு உடன் பயணித்தல் உற்சாகமாக இருந்தது.பாலு நிறைய பேசுவான்.எதை பற்றி வேண்டுமானாலும் பேசுவான்.பேசுவதன் மூலமாக உறவாடுவதும் உறவை பலப்படுத்துவதும் அவன் பாணி.அவன் மனைவி நேர் எதிர்.அளந்து பேசுவார்.ஆர்பாட்டமில்லாத பேச்சாக அது இருக்கும்.  அரசுப்பள்ளியில் தலைமை ஆசிரியராக இருக்கும் ஒருவர் இப்படி இருப்பது ஆச்சரியம்.பாலுவுக்கு சரியான டீச்சர்.விழுப்புரம் வந்த வருவதற்கு முன்னே நானும் பாலுவும் வாயிற்படிக்கு வந்து நின்றோம்.கென்னடியையும் அவன் குடும்பத்தினரையும் வரவேற்க.கென்னடியை பார்த்ததுமே நம்  மனம் இளமையாகிவிடும்.அப்படி ஒரு வரம் அவனுக்கு.எப்போதும் சிரித்தபடி இருப்பான்.விழுப்புரத்தில் அவர்களோடு சேர்ந்து பயணம் தொடந்தது.பேச்சு,பேச்சு,பேச்சு,

No comments:

Post a Comment

உங்கள் எதிவினையை இங்கு பதியலாமே