Sunday 11 September, 2011

02.09.2011 திருமலை பயணம் 3



மதியம் 12.30 க்கு எக்மோர் சென்றோம்.நண்பர்கள் கணேசனும் பாபாவும் எங்களை காண வந்திருந்தனர்.லக்கேஜ் இருந்ததால் சரவணபவன் செல்லாமல் எதிரே இருந்த சங்கீதா ஹோட்டலுக்கு மதிய உணவுக்குச் சென்றோம்.95.00 ரூ சாப்பாடு.விலைகும் சுவைக்கும் சம்பந்தமே இல்லை.சாப்பிட்ட பின் ”அன்னதாதா சுகிபவா” என மனம் வாழ்த்த வேண்டும்.அதுதான் சாப்பாடு. அங்கிருந்து 3 ஆட்டோக்களில் செண்ட்ரல் சென்று சப்தகிரி எக்ஸ்பிரஸ் ப்டித்தோம்.ஏ.சி யின் சுகத்தில் கண்னயர்ந்தோம்.கண்விழித்த போது 4.00 மணி வாய் ஏதாவது கேட்டது.கென்னடி வேகவைத்த மல்லாட்டை(நிலக்கடலை) கொண்டு வந்திருந்தான்.அதை அனைவரும் சேர்ந்து காலி செய்தோம்.திருப்பதி 5.00 மணி.ஒரு ஜீப் பிடித்து திருமலை சென்றோம்.எங்கள் குழுவில் 9 பேர்.ஜீப்பிற்கு ரூ500 பேசினோம்.நண்பர் மூலமாக கர்நாடகா கெஸ்ட் ஹவுஸ்ல் இரண்டு ரூம் போடப்பட்டிருந்தது.இரண்டு கட்டில் கொண்ட அறை.போதுமான அளவு இருந்தது.மறுநாள் காலை 11.00 மணிக்கு தான் தரிசனம்.வெண்னீர் குளியல் போட்டு விட்டு கடைவீதிக்குச் என்றோம். பெண்கள் வேண்டியதை வாங்கிக் கொண்டார்கள்.நான்,பாலு,கென்னடி,விபின்,தினா அய்வரும் ஒரு இடத்தில் உட்கார்ந்து விட்டோம்.திருமலை எப்போதும் ஜே ஜே எனதான் உள்ளது.ஒரு வட இந்திய பெண்மணி தன் கணவனுக்கு கால் அமுக்கிக் கொண்டிருந்தாள். நட்ந்து வந்திருக்க வேண்டும்.பல்வேறு விதமான மனிதர்கள்,பல தேசம்,பல மொழிகள்,எல்லாம் பாலாஜியை தரிசிக்கவே அதில் நானும் ஒருவன் எனும் போது மனம் நெகிழ்ந்தது.இரவு டிபன் முடித்து ரூம்க்கு வந்தோம்.நல்ல தூக்கம்.

No comments:

Post a Comment

உங்கள் எதிவினையை இங்கு பதியலாமே