Sunday 11 September, 2011

திருமலை பயணம் 4

காலை சீக்கிரமே எழுந்து வராகஸ்வாமி தரிசனம் முடித்து 11.00 மணிக்கு 50.00 ரூ  கியூ வில் நின்றோம்.12.30 க்கு தரிசனம் கிடைத்தது.எப்போது போனாலும் பெருமாள் திருப்தியாக தரிசனம் தருவார்.”ஜெருகண்டி” தொந்தரவு எனக்கிருந்ததில்லை. அங்கிருந்தவர் என்னை பிடித்து நிறுத்தி நன்றாக சேவிக்க அனுமதித்தார்.எவ்வளவு சேவித்தால் என்ன மனசில் அடங்குபவனா அவன்.கனவு கண்ட மாதிரி கன்ணுக்குள்ளும்,மனசுக்குள்ளும்,பிடிபட மாட்டான்.வெளியில் வந்து லட்டு பிரசாதம் வாங்கச் சென்றபோது தினாவை தவறவிட்டு விட்டோம்.1.30 மணிநேரம் அவனைக் கண்டு பிடிக்க அலைந்தோம்.ஒரு வழியாக ஒரு பண்ருட்டி நண்பர் ஒருவர் தினாவை செய்தி ஒலிபரப்பும் இடத்திற்கு அழைத்து வந்திருந்தார்.செல்போன் அனுமதி யில்லாததால் அதனை ரூமிலேயே விட்டு விட்டு வந்திருந்தோம்.கென்னடியும்,அவன் மனைவி மஞ்சுவும் பட்ட அவஸ்தைகள் பார்க்க முடியவில்லை,பெருமாளை வேண்டிக்கொள்வதை தவிர வேறு என்ன செய்ய முடியும்.ஏகப்பட்ட வேண்டுதல்களை பெருமாள் பெற்றுக் கொண்டிருப்பார்.4.00 மணிக்கு மதிய உணவு அன்ன தான சத்திரத்தில் சாப்பிட்டு விட்டு அறைக்கு திரும்பினோம்.ஒரு ஜீப் பிடித்து (ரூ650) சிலாத்தோரணம்,சக்கர தீர்த்தம்,ஆகாச கங்கை,பாபவிநாசம்,பாபாஜி ஜீவசமாதி,போன்ற இடங்களுக்குச் சென்று விட்டு அறைக்குத் திரும்பினோம்.இரவு டிபன் முடித்து விட்டு பாலு வுடன் இந்துவும்,மரகதமும் பர்ச்சேஸ் கிளம்பினார்கள்.எப்படித்தான் முடிகிறதோ.பாலு பாவம் முகம் சுளிக்காமல் உடன் சென்று வந்தான் மற்றவர்கள் அனைவரும் அறைக்குச் சென்று நல்ல தூக்கம் போட்டோம்.காலை 6.00 க்கு திருமலையிலிருந்து காலி செய்து ஒரு ஜீப் ( ரூ850 திருமலையிலிருந்து அலமேலுமங்காபுரம்,ஹோட்டல் டிபன் வெயிட்டிங்,ரயில்வே ஸ்டேஷன்) பிடித்து அலமேலு மங்காபுரம் சென்று தரிசனம் முடித்து அங்கிருந்து ரயில்வே ஸ்டேஷன் வந்தோம் 09.55 க்கு சென்னைக்கு டிரைன்.ஏ.சி இல்லாத குறை நன்கு தெரிந்தது. 

No comments:

Post a Comment

உங்கள் எதிவினையை இங்கு பதியலாமே