திருக்கோஷ்ட்டியூருக்கு அருகில் 7 கிமீ தொலைவில்தான் இருக்கிறது பட்டமங்கலம் @ பட்டமங்கை. இங்கு விசேஷம் ஆலமரத்தின் கீழ் கிழக்கு நோக்கி தனி கோவில் கொண்டுள்ள தட்சிணாமூர்த்தி . சிவன் கோவிலின் உப கோவிலாக இருக்கிறது .ஏதொ ஒரு செட்டியார் கோர்ட்டில் கேஸ்போட்டு அவர் பாத்தியதையில் இருப்பதாக கல்வெட்டு சொல்கிறது. 3,5,7,9,12,108,1008, என்கிற கணக்கில் ஆலமரத்தைச் சேர்த்து தட்சிணாமூர்த்தி யை சுற்றி வந்தால் ஒவ்வொரு பலன் உண்டு. ( விவரங்களை நெட்டில் தட்டி தெரிந்து கொள்ளவும்) ஹி....ஹி....
😁 நான் 7 சுற்று சுற்றினேன். பிரம்மாண்டமான ஆலமரம்.விழுதுகள் சூழ ரம்யமாய் இருக்கிறது . மஞ்சள் துணி முடிந்து வைக்கிறார்கள் வேண்டுதலாய்.வலப்பக்கம் கருப்பர் கோவில்.இடப்பக்கம் அய்யனார் கோவில்.அய்யனார் கோவில் அருகே உள்ள ஆளுயரம் உள்ள மனிதச்சுதை உருவங்களை ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது அமானுஷ்யமாக இருக்கிறது .பெரிய குளம், நடுவில் மண்டபம்.1930 ல் குடமுழுக்கு ஆனபோது எடுக்கப்பட்ட புகைப்படம் மாட்டியுள்ளார்கள்.குளக்கரையில் வரிசைக்கட்டி நிற்கும் கார்கள் " மதரஸா பட்டிணம்" படத்தை நினைவு படுத்துகிறது.

No comments:
Post a Comment
உங்கள் எதிவினையை இங்கு பதியலாமே